2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'சமஸ்டி அடிப்படையிலான தீர்வே நிம்மதியை தரும்'

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நாட்டில் தற்போது உள்ள ஒற்றை ஆட்சி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்படுவதன் மூலமே தமிழர்கள் நிம்மதியான வாழ்வொன்றை வாழ முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சனிக்கிழமை (30) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த முப்பது ஆண்டு காலமாக வடக்கு, கிழக்கில் மாகாண சபை முறைமை இருக்கவில்லை. இதனால் சர்வாதிகாரமாகவே, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்று வந்தது. அரச அதிகாரிகளும் ஏதோ ஒரு கட்சிக்கு சார்ந்தே செயற்பட வேண்டிய நிலையும் காணப்பட்டது.

கடந்த காலங்களில் இருந்த அரச அதிகாரிகளை வினைத்திறனாக செயற்பட வைக்க வேண்டிய கடமை, எமது இணைத்தலைமைகளுக்கு உண்டு. தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் உள்ளது என கூறப்பட்டாலும் அதனை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க ஆரம்பிக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் நன்மைகள் எமக்கு கிட்டவில்லை.

புதிய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட வரவு- செலவு திட்டத்தில். போரினால் பாதிக்கபட்ட மாகாணம் என்ற வகையில் எமது மாகாணத்துக்;கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்றார்.

'13ஆவது திருத்தச் சட்டத்தினூடாக எமக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எமது அபிவிருத்தியை நாம் முன்னெடுப்பதற்கு இந்த ஒற்றையாட்சி முறைமையும் ஒரு தடையாக உள்ளது. ஆகையால் எமக்கான அதிகாரப் பரவலாக்கல் வழங்கப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X