2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'சி.வி தொடர்பான முடிவு சரியானது'

George   / 2016 நவம்பர் 06 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நாம் அன்று தெரிவு செய்தது சரி என நான் நினைக்கிறேன'; என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாளிதழ் ஒன்றின் சிறப்பு இதழ் வெளியீடு, யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது. இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாண தேர்தல் நடாத்துவதற்கு முடிவு வந்த போது முதலமைச்சர் தெரிவு என்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி ஆராய்ந்தது. அதற்கு முன்பே, சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. பின்பு அது ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X