2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சுவாமிநாதன் சர்வதிகாரமாக நடக்கின்றார்': சிறிதரன்

Sudharshini   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் கட்டாயம் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சர்வதிகாரமாகக் கூறுகின்றார். இது ஆரோக்கியமாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மேற்படி வீட்டுத்திட்டத்தின் கீழ் உரும்பிராயில் அமைக்கப்பட்ட வீடொன்றை வெள்ளிக்கிழமை (01) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

'இந்த வீடுகள் ஐந்து வருடங்களில் சகல நிலைமைகளையும் இழந்துவிடும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மீள்குடியேறிய மக்கள், தங்களுக்கு எவ்வாறான வீடுகள் தேவையென்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். மீள்குடியேறிய மக்கள், தாம் நிம்மதியாக வாழ்வதற்கான வீடுகளையே எதிர்பார்க்கின்றனர்.

சுவாமிநாதன், இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களைச் செவிசாய்க்காமல், தூக்கி எறிவது போல் நடக்க கூடாது.

ஓர் அமைச்சால், 5 இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம், 8 இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம் 2.1 மில்லியன் ரூபாய் வீட்டுத்திட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதும், வடக்கில் உள்ள தொண்டு நிறுவனங்களை வெளியேறச் சொல்வதும், அரசாங்கத்தால் செயற்படுத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சித்திட்டமாக எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு அரசாங்கம் சுவாமிநாதன் போன்றோரைப் பயன்படுத்துகின்றது. இதனை சுவாமிநாதன் கவனத்தில் எடுக்க வேண்டும். மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காமல் இதனை நடைமுறைப்படுத்தினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X