2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜனவரி மாத வழக்கு விசாரணைகள் புதிய நீதவானுடன் ஆரம்பம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவு சுற்றுலா நீதிமன்றின் ஜனவரி மாத அமர்வுகள், இன்று வியாழக்கிழமை (21) புதிதாக நியமனம் பெற்று வந்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாலால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நெடுந்தீவு பொலிஸ் நிலைய நியாயாதிக்கத்துக்குட்பட்ட வழக்கு விசாரணைகளே இங்கு விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, நெடுந்தீவு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட 30 வழக்குகள், நீதிவானால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மாதத்தின் பிரதி 2 ஆவது வாரத்தில் நெடுந்தீவு சுற்றுலா நீதிமன்றில் வழக்குகள், ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவானால் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஊர்காவற்துறை நீதவான் நெடுந்தீவுக்குச் சென்று அங்கு விசாரணைகள் இடம்பெறும்.

அமர்வுகள் முடிவுற்றதும் நீதவான் நெடுந்தீவு பகுதியைச் சுற்றி பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X