2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'ஜனாதிபதியின் வாக்குறுதி நம்பிக்கை தந்துள்ளது'

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஆறு மாதங்களில்  இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதி நம்பிக்கைத் தருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஞாயிற்றுக்கிழமை (20) தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். மாவட்டத்தில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று, இடம்பெயர்ந்த நிலையில் அங்கு வாழ்ந்துவரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களது துயரங்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இம் மக்கள் கடந்த 25 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில், பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மீள் குடியேற்றம் குறித்தும், மீள் குடியேற்றப்படும் வரை தற்போது இம்மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களின் அடிப்படை மற்றும் ஏனைய வசதிகள், உலர் உணவு நிவாரணம் என்பன வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நத்தார் தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றும்போது, இன்னும் ஆறு மாதங்களில் இம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறியுள்ளமை எமக்கு நம்பிக்கையளிப்பதாகவே உள்ளது.

எனவே, ஜனாதிபதியின் இம்முயற்சி வெற்றிபெற எங்களால் இயன்ற உதவிகளையும் நாம் செய்வோம். இதற்கு ஏனைய அனைத்துத் தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X