Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 02 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியில் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் மற்றும் அச்சுவேலி திரேஸா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் 26 மில்லியன் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (02) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் உதவி பெறும் திட்டத்தின் அடிப்படையில், ஜப்பானிய அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்றிட்டத்தின், கல்வி நிலையை உயர்த்தும் திட்டத்தின் கீழ் இந்த உதவியை ஜப்பானிய அரசாங்கம் வழங்குகின்றது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனும இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, மேற்படி உதவித்திட்டம் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், முத்துத்தம்பி மகா வித்தியாலய அதிபர் இராமலிங்கம் குருக்கள் பசுபதீஸ்வரன், அச்சுவேலி திரேஸா மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் 11.6 மில்லியன் ரூபாய் செலவிலும், அச்சுவேலி திரேஸா மகளிர் கல்லூரியில் 14.4 மில்லியன் ரூபாய் செலவிலும் இந்த வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
54 minute ago