2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது'

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சரவணபவ ஆனந்தன், திருச்செந்தூரன்

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் தங்களை தாமே ஆளும் கட்டமைப்பு என்பன, தமிழ் மக்களுக்குக் கிடைப்பதென்பது, கேள்விக்குறியாகி உள்ளதென, வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

'தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவிருக்கும் 'எழுக தமிழ்' பேரணிக்கு, வடமாகாண மீனவர் சங்கங்களின் சம்மேளனம் முழு ஆதரவு வழங்கும். அன்று, மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது, சந்தைகள் அடைக்கப்பட்டு ஆதரவு வழங்குவார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு, இன்று அரசுடன் இணைந்து செயற்படுகின்றது. இதனால், மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்துக்கு தெரிவிப்பதற்கு அனைவரும் இப்பேரணியில் இணைய வேண்டும்.

யாழ். மாவட்டத்திலுள்ள பொதுச்சேவைகள் (வைத்தியசாலைகள், மருந்துக்கடைகள் தவிர), அனைத்து கடை உரிமையாளர்களும் தமது தொழில் நிறுவனங்களை அடைத்து இப்பேரணியை வெற்றியடையச் செய்வதன் மூலம், வடமாகாண முதலமைச்சரின் கரங்களைப் பலப்படுத்தி தமிழ் மக்கள் பேரவையை வலுப்படுத்த வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X