Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் தமிழ் மாநில அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த கருத்தறியும் விசேட அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை (11) இரண்டாவது நாளாகவும் மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஆறு தசாப்தத்துக்கு மேற்பட்ட இன முரண்பாட்டு சமத்துவமின்மை ஜனநாயக அத்துமீறல் அடக்கி ஆளும் மேட்டிமைத்தனம் எதேச்சதிகார ஏகாதிபத்தியம் சிங்கள பௌத்த நாடு எனும் மேட்டிமைத்தனம் எனும் வாதங்கள் உருவூட்டப்பட்டதன் விளைவே பல இலட்சங்கணக்கான உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்தது.
பல ஒப்பந்தங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டன. வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதனால் நம்பிக்கையற்றவர்களாகி விட்ட நிலையே காணப்படுகின்றது.
எனவே, எதிர்காலத்தில் ஐக்கிய இலங்கைக்குள் சமச்சீரான அதிகாரப் பரவலாக்க முறையினூடாக எங்களை நாங்கள் ஆளுகிறவர்களாக வட,கிழக்கு தாயகம் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணயம் ஆகிய உரிமைகள் தன்னகத்தே கொண்ட சிறப்பதிகார அலகு பூரண சமஷ்டி அதிகார முறைமை உதாரணம் சுவிஸ், கொசோவா போன்ற நாடுகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்புப் போல் வரன் நெறிமுறை நீதி தவறினால் இணைந்து வாழ்தல் என்பது குந்தகம் ஏற்படும். எனவே, சுதந்திர வாழ்வுரிமைக்காகப் போராடிய இனம் சமஷ்டி கோருவது எந்த வகையிலும் தவறாக முடியாது.
ஆகவே, வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு வட,கிழக்கு தமிழ் மாநில அரசாக்கப்பட்டு அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இணையான அதிகார பங்கீடு வழங்குவதுடன் அவர்களது தனித்துவ நிர்ணயியலையும் உள்ளீர்த்துக் கொள்வது அவசியமாகும்.
அத்துடன் இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்துக்கு இந்திய மத்திய அரசாங்கம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது போல் வட,கிழக்கு பகுதிக்கும் வழங்குவதுடன் இல்லையேல் பிரித்தானிய ஆதிக்கத்தில் உள்ள ஸ்கொட்லாந்துக்கு உள்ள தனித்து இராட்சிய அங்கீகாரத்தையாவது வழங்க வேண்டும்.
எனவே, சிங்கள மக்கள் சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு உருவாக்கத்தை தடுப்பார்களாயின் மறுபடியும் பிரிவினைவாதம் மேலெழக் கூடிய ஏதுவான நிலை தோன்றலாம். இதை சிங்கள தேசம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago