2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தென்னை மீள்நடுகைக்கு உதவ வேண்டும்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில், தென்னை மீள்நடுகைக்கு, உதவியமைப்புகள் உதவவேண்டுமென கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் இருந்த 5,000 வரையான தென்னை மரங்களில் 2,500 வரையான தென்னை மரங்கள் அழிவடைந்தன.

தற்போது இப்பகுதியில் 450 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன. எனவே, அழிவடைந்த மரங்களுக்குப் பதிலாக தென்னை கன்றுகளை மீள்நடுகை மேற்கொள்ளுமாறு இக்கிராம அபிவிருத்திச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X