2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் நிபந்தனை விதிக்க வேண்டும்' என, வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

'தமிழ் தேசிய கூட்டமைப்பினர், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் போது, நிபந்தனைகளை விதித்து ஆதரவு வழங்க வேண்டும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அவ்வாறு செய்வதில்லை. தற்போது கூட, பட்ஜெட்டுக்கு ஆதரவு வழங்கும் போது, மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர்கள், அவ்வாறு செய்வதில்லை. அதற்கு அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை கூட காரணமாக இருக்கலாம்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

மாவீரர் நாளினை, மாவீரர் துயிலும் இல்லங்களில் அனுஸ்டிக்க நாம் தயார். அதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டுவர வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முன்வர வேண்டும். அவ்வாறு மக்கள் ஒன்று திரண்டால், நாம் மாவீரர் தினத்தை துயிலும் இல்லங்களில் அனுஸ்டிக்க தயார்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X