2025 ஜூலை 19, சனிக்கிழமை

' நன்னீர் வழங்கும் திட்டத்தால் பாதிக்கப்படுவோம்'

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமராட்சி கிழக்கு கடலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நன்னீர் வழங்கும் திட்டத்தால் கடலில் உப்புச் செறிவு அதிகரிக்கும் என்றும் இதனால், தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை (11) அமைச்சர் சென்றபோதே, மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இந்தத் திட்டத்தாலும் பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும் உடனடியாக இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோரியுமே மீனவர்கள் மகஜரை கையளித்தனர்.

மக்களின் அனுமதியுடனேயே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் ஆராய்ச்சிகள் செய்த பின்னர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஆராய்ச்சி செய்யாமல் நடைமுறைப்படுத்தப்படாது என அமைச்சர் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X