2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நான்கு நாட்களில் 3 திருட்டு சம்பவங்கள்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் மூன்று கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணுவில் பகுதியில் புதன்கிழமை (20) பகல், வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் 11 பவுண் நகைகளை திருடிச்சென்றுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் திருமணச்சடங்கு ஒன்றுக்கு சென்றிருந்த வேளையிலேயே,வீட்டின் முன் கதவை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை,புதன்கிழமை (20) இரவு, இணுவில், பப்பாம் தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி 23 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடந்த 18 ஆம் திகதி உடுவில் மான்ஸ் பாடசாலை பகுதியில் உள்ள வீட்டிலிருந்த வயோதிப பெண்ணை அச்சுறுத்தி, 9 பவுண் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளைடிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவங்கள் தொடர்பில், வழக்கு பதிவு செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இதுவரை சந்தேக நபர்கள் எவரையும் கைது செய்யாதமை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X