2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'நெல் சந்தைப்படுத்தும் சபை முடங்கிப் போயுள்ளதா'

Niroshini   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல் சந்தைப்படுத்தல் சபை முடங்கிப் போய்க் கிடக்கிறதா. அதன் செயற்பாடுகளின் எல்லை எது. நாடளாவிய ரீதியில் எமது விவசாய மக்களின் நெல்லை அதிகளவு கொள்வனவு செய்யக்கூடிய வசதிகள் ,ச் சபைக்கு ,ல்லையா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இவ் விடயம் தொடர்பில் அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியில் ஈடுபடுகின்ற விவசாயிகள், தங்களது உற்பத்திகளை உத்தரவாத விலைக்கு சந்தைப்படுத்த இயலாததொரு நிலை தொடர்கிறது. பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தும் பல்வேறு செலவினங்களை ஏற்றும் இவ்வுற்பத்தியில் ஈடுபட்டும், அறுவடையின் பின்னர் தங்களது உற்பத்திகளை உத்தரவாத விலைக்கு சந்தைப்படுத்த இயலாத நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென் பகுதியிலிருந்து வருகின்ற தனியார் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலையிலேயே இவர்களிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்கின்றனர். இப்பகுதி விவசாயிகளும் வேறு மாற்று வழியின்றி தங்களது உற்பத்திகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலையே தொடர்கிறது.

எனவே, நெல் சந்தைப்படுத்தல் சபை இதற்கொரு பொறிமுறையை உரிய வகையில் ஏற்படுத்த முன்வர வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கான களஞ்சியங்கள் வடக்கில் போதியளவு இல்லை. இருக்கின்ற ஓரிரு களஞ்சியங்களிலும் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் ,ன்னும் அப்படியே களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால், மேலும் நெல்லை களஞ்சியப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலைப்பாடுகள் இனியும் தொடராதிருக்கும் வகையிலும், நெல்லை போதியளவு விவசாய மக்களிடமிருந்து கொள்வனவு செய்யக்கூடிய வகையிலும் இச் சபையின் செயற்பாடுகள் அமையவேண்டும். இதற்கு உகந்ததொரு செயல்முறையை  கிராமிய பொருளாதார விவகார அமைச்சு மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X