2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பயணிகள் படகு சேவை நடத்தியவருக்குப் பிணை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தொண்டைமானாறு அக்கரைப் கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பயணிகள் படகு சேவையில் ஈடுபட்ட படகோட்டிக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (29) அனுமதியளித்தார்.

அத்துடன், பொலிஸாரினால் கைபற்றப்பட்ட படகை 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு பிணை முறியில் விடுவித்ததுடன், வழக்கை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தொண்டைமானாறு கடற்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் 100 ரூபாய் பணம் வசூலித்து, அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிச் சேவையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் அச்சுவேலி பொலிஸாரால் கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இதன்போது, படகு சேவை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரம் அவரிடம் இருக்கவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து, குறித்த நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X