2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'பஸ் சேவை வேண்டும்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்து கிளிநொச்சி அறிவியல் நகர் வரையில் பஸ் சேவை ஆரம்பித்து தருமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை டிப்போ முகாமையாளரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தினமும் காலை 8:15 மணிக்கு கிளிநொச்சியை வந்தடையக்கூடியவாறும், மாலை 4:15க்கு கிளநொச்சியில் இருந்து புறப்படக்கூடியவாறும் இந்த பஸ் சேவையினை ஆரம்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்கலைகழகத்துக்கு, மாணவர்கள் நாளாந்தம் வந்து செல்வதிலும், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர், தனியான பஸ் சேவை இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் நன்மை கருதி, பருத்தித்துறையில் இருந்து கிளிநொச்சி அறிவியல்நகர் வரை, அரச பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X