Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
விடுதலைப் புலிகளின் தளபதிகளான எழிலன், விமல் மாஸ்ரர், நரேன், மேனன், ஆகியோரை இராணுவத்தினர் வட்டுவாகலில் இருந்து பஸ்களில் கொண்டு செல்வதை கண்டதாக விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் நிதிப்பிரிவில் பொறுப்பாளராகவிருந்த வைரமுத்து ரதீஸ்வரன் எனப்படும் சுமன் என்பவரின் மனைவி சபிதா சாட்சியமளித்தார்.
பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய அதிக முறைப்பாடுகள் காணாமற்போனோரைக் கண்டறிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலக இன்று திங்கட்கிழமை அமர்வில் உறவினர்களால் கூறப்பட்டது.
இறுதி யுத்தத்தில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் இராணுவத்தில் சரணடைந்திருந்தமையும், பாதிரியார் உள்ளிட்ட அனைவருக்கும் என்ன ஆனது? என்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான அமர்வு இன்று திங்கட்கிழமை (14) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, 4 சாட்சியங்கள் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாக கூறினர்.
இதன்போது,சபிதா சாட்சியமளிக்கையில்,
வட்டுவாகலில் 3 பஸ்கள் தரித்து நின்றன. அந்த பஸ்களில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த சுமார் 40 விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஏற்றப்பட்டனர். என்னை ஓமந்தைக்குச் செல்லுமாறு கூறிய கணவர், தங்களையும் அங்கு தான் கொண்டு வருவார்கள் என்றும் என்னிடம் தெரிவித்தார். இதன்போது, முக்கிய தளபதிகள் பலரையும் அங்கு கண்டிருந்தேன். ஆனால் தற்போது எங்கே என்று தெரியவில்லை' என்றார்.
கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான திருஞானசுந்தரம் ஜனார்த்தனன் என அழைக்கப்படும் நரேன் என்பவரும் அவரது மனைவியும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பாதிரியார் பிரான்ஸிஸ் தலைமையில் சரணடைந்தனர்.
அவர்களை அனைவரையும் இராணுவத்தினர் பஸ்ஸில் ஏற்றியதுடன், மனைவிக்கு பஸ்ஸில் இடமில்லையெனக் கூறப்பட்டு, அவர் ஓமந்தையில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளார். ஆனால், நரேன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை அவரது தாயார் சாட்சியமளித்தார்.
இதேவேளை மாதவன் மாஸ்டர் எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாகவும் அவரது மனைவி சாட்சியமளித்தார்.
'கதிர்காமத்தம்பி தர்மலிங்கம்' எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியொருவரும் இவ்வாறு சரணடைந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago