2025 ஜூலை 19, சனிக்கிழமை

'பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

மயிலிட்டி துறைமுகத்தை பயன்படுத்த மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மயிலிட்டி மற்றும் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகங்களை பார்வையிடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் திங்கட்கிழமை (11) சென்றிருந்தார். இதன்போது, உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை தாங்கள் பயன்படுத்த அனுமதியளிக்கமாறு மயிலிட்டி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் மீன் உற்பத்தியில் அதிகளவான பங்களிப்பை மயிலிட்டி மீனவர்கள் வழங்கியிருந்தனர் எனவும் இந்தப் பகுதியில் சுமார் 500 மீனவப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.

இதன்போது, மயிலிட்டி துறைமுகத்தை பயன்படுத்த மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்க முடியும். எனினும் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கதைப்பதாகவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X