Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் புதிய ஹோட்டல்கள் தொடங்குவதற்கு 2019ஆம் ஆண்டு வரையில் அனுமதியில்லையென மாவட்டச் செயலகம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் தவராஜா திலகராஜ் தெரிவித்தார்.
ரில்கோ விருந்தினர் விடுதியில் 5ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (20) இரவு நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் நீர்ப் பிரச்சினை இருப்பதன் காரணமாக, புதிய ஹோட்டல்கள் தொடங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரணைமடுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுவரப்பட்ட பின்னரே ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வடிகாலமைப்பானது சீரான முறையில் செயற்படவில்லையென்பதாலும் ஹோட்டல் அனுமதியானது நிறுத்தப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால், கல்லுண்டாய் வெளியில் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே ஹோட்டல்களுக்கான அனுமதி வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும்,இந்த அனுமதி மறுப்பானது, இங்குள்ளவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து இங்கு வந்து சுற்றுலாத்துறையை மேற்கொள்ள வருபவர்களுக்கு மாத்திரமே ஆகும். ஏனெனில் தென்னிலங்கையிலிருந்து வருபவர்களுக்கு அனுமதியானது கொடுக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago