2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'பிராந்திய விமான நிலையமாக பலாலி ​வேண்டும்'

George   / 2017 மே 10 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“யாழ். பலாலி விமான நிலையத்துக்கு, மக்களுடைய காணிகளை சுவீகரிக்காமல் அதனை பிராந்திய விமான நிலையமாக புனரமைப்பு செய்வதுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை பாரியளவில் விஸ்தரிப்பு செய்ய இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, கோரிக்கை விடுத்து வடமாகாண சபையில் தீர்மானம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை முன்மொழிந் அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானம் உரையாற்றுகையில், “வடமாகாண சபையின் 6ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட 71ஆவது தீர்மானத்தின்படி, பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை புனரமைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய பலாலி விமான நிலையத்தை மேலதிக காணி சுவீகரிப்பு எதுவும் இல்லாமல் ஒரு பிராந்திய விமான நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அதேபோல் காங்கேசன்துறை துறைமுகத்தையும் பாரியளவில் புனரமைப்பு செய்யவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் நியாயமாக எடுக்கவேண்டும்” என்றார்.

குறித்த பிரேரணை சபையில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதுடன், பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X