2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லதொரு சந்தர்ப்பம்'

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடக்கு, கிழக்கில் அழிவடைந்து, நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்றது, இதில் இணைத்தலைவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கடந்த கால யுத்தத்தால் வடக்கு, கிழக்கில்; பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. அதனை முன்னேற்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், இதனையும் செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X