Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மார்ச் 01 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தாய்க்கு சமஹன் வாங்க கடைக்குச் சென்ற எனது மகன் உதயசேகரன் மோகரதனை (காணாமற்போகும் போது வயது 19) கடத்தியவர்கள் அதன் பின்னர் என்னையும் சுடுவதற்கு வீடு வரையில் வந்தனர் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், மட்டுவில் பகுதியைச் சேர்ந்த உதயசேகரன் என்பவர் சாட்சியமளித்தார்.
மேற்படி குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
“2006ஆம் ஆண்ட ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி எனது மகன் கடைக்குச் சென்ற போது, காணாமற்போனார். தொடர்ந்து அதே மாதம் 11ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு எமது வீட்டுக்கு பவள் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
என்னைப் பிடித்து இழுத்துச் சென்று, ஆயுதங்கள் புதைத்து வைத்திருக்கின்றாய் எடுத்துத்தா என்றனர். உடனே அதில் நின்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் பவள் வாகனம் வரையில் ஓடிச்சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்து, ஒரு இடத்தைக் காட்டி அதை தோண்டுமாறு கூறினார்.
அதை நான் தோண்டியபோது, அங்கு ஒன்றும் இல்லை. மீண்டும் அந்தச் சிப்பாய் பவள் வாகனம் வரையில் சென்றுவிட்டு, பிறிதொரு இடத்தை தோண்டுமாறு கூறினார். அங்கு தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை.
பிற்பகல் 6 மணியளவில் அங்கு நின்ற இராணுவத்தினரின் வயலஸ்கள் அனைத்தும் ஒலித்தன.
அனைவரும் உடனே கூடிச் சென்று பவள் வாகனத்தில் ஏறினர். அன்று 6 மணிக்குத் தான் 3 ஆம் ஈழப்போர் ஆரம்பமானது.
தொடர்ந்து நாங்கள் மகனைத் தேடவில்லை. பொலிஸில் நம்பிக்கையின்மையால் அங்கு முறைப்படு செய்யவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவில் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தோம்.
இதேவேளை, என்னை கொடிகாமம் சிவில் அலுவலகத்துக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கையெழுத்திட வரச்சொல்லி, நான் சென்று வந்தேன். இப்படிப் போய் வந்தமையால் மனம் பாதிக்கப்பட்ட நான், 'புலி என்றால் என்னைச் சுடு, ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடர்' என சிவில் அலுவலகத்தில் இருந்த இராணுவத்தினரிடம் கூறினேன்.
'நீ இப்போது போ, அதற்கு நாள் இருக்கின்றது' என அங்கிருந்த இராணுவத்தினர் கூறினர். அடுத்து சில நாட்களில், 'உனக்கு விசாரணை முடிந்துவிட்டது. இனி நீ இங்கு வரத் தேவையில்லை' என அங்கிருந்த இராணுவத்தினர் எனக்கு கூறினர்.
அதன் பின்னர் எனக்கு பயம் தொற்றியது. ஏனெனில் கொடிகாமம் சிவில் அலுவலகத்தில், 'விசாரணை முடிந்தது' என்று ஒருவரை பார்த்துக் கூறினால், குறைந்தது ஒரு வாரத்துக்குள் அவரைச் சுட்டுக்கொன்றுவிடுவார்கள்.
இதனை ஊகித்துக்கொண்ட நான் உறவினர் வீடுகளில் மறைந்து வாழத் தொடங்கினேன். இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி, எனது வீட்டுக்கு மூவர் பிஸ்டலுடன் வந்தார்கள். நான் வீட்டுக்கு பின்புறத்திலுள்ள தோட்டத்தில் நின்றிருந்தேன்.
நான் வீட்டில் இல்லையென எனது மனைவி அவர்களுக்கு கூறினார். அவர்கள் வீட்டுக்குள் தேடி திரிந்துவிட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் வீட்டுக்கு வந்த நான், வேறு இடத்துக்கு மாறுவதற்கு எண்ணினேன். வீதியைக் கடக்க நோட்டம் பார்க்க ஆட்களை அனுப்பி வீதியைக் கடந்தேன். நான் வீதியைக் கடக்கும் போது, என்னை ஒரு இராணுவ சிப்பாய் கண்டு, பெயர் சொல்லி அழைத்தான். நான் அதைக் கவனிக்காமல் தப்பித்து, மறைவாக வாழ்ந்தேன் என்றார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago