2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'மக்களை பேய்க்காட்டக்கூடாது'

Niroshini   / 2016 ஜனவரி 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'வடமாகாண சபை ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகியும், எவ்வித வினைத்திறனான செயற்பாடுகளை செய்யவில்லை. மக்களைப் பேய்க்காட்டாமல் நல்லதைச் செய்தால், அதற்கு எந்தவித தடையும் இருக்காது' என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வவுனியாவிலிருந்து கைதடிக்கு சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு நாங்கள் வரவில்லை. வடமாகாண சபையின் மூலம் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே வருகின்றோம். ஆகவே, வடமாகாண சபை வினைத்திறனாக செயற்படுவதற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X