2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

58 மரக்குற்றிகள் மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்படட புத்துவெட்டுவான் மருதங்குளம் கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில், கடத்திச் செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த  58 பாலை, முதிரை மரக்குற்றிகளை நேற்று வெள்ளிக்கிழமை (02) பொலிஸார் மீட்டுள்ளனர்.

எனினும் குறித்த கடத்திலில் ஈடுபடவிருந்து சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம், கொக்காவில், கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் குளம், தென்னியன் குளம் ஆகிய கிராமங்களில் இருந்து சட்டவிரோதமான முறையிலும் சூழலைப் பாதிக்கும் வகையிலும் ஆற்று மணல், கிரவல் மண் அகழ்வு உட்பட பயன்தரு மரங்கள் வெட்டப்பட்டு தினசரி கடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்தத் தொகை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் மரக்கடத்தலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை மிக விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X