2025 ஜூலை 19, சனிக்கிழமை

4 மாடுகள் மீட்பு

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நான்கு மாடுகளை ஏற்றிச் சென்ற சிறிய லொறி ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை மீட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,குறித்த லொறியை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இந் நிலையில் லொறியை செலுத்தி வந்தவர்;கள், பொலிஸாரை கண்டதும் லொறியை நிறுத்தி விட்டு காட்டு வழியாக தப்பிச்சென்றுள்ளனர்.

நான்கு மாடுகளுடன் மீட்கப்பட்ட லொறியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய லொறி உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X