2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

16 மாதங்களின் பின்னர் பிணையில் வந்த கொலைச் சந்தேகநபர்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் கச்சாய் வீதியில் தனது மனைவி மற்றும் மகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி பிணை கிடைத்த நபர், அக்காலத்தில் பிணை எடுக்க எவரும் முன்வராமையால் செவ்வாய்க்கிழமை (09) பிணையில் வெளியில் வந்தார்.

சந்தேகநபரின் சகோதரி, நீதிமன்றத்துக்கு வருகை தந்து சந்தேகநபரை பிணையில் எடுத்தார்.

மேற்படி பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 39 வயதுடைய பெண்ணொருவரும், அவருயை 19 வயதுடைய மகள் ஒருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும், மகன் ஒருவரும் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த அந்த வீட்டின் குடும்பஸ்தரை அந்தவருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் குறித்த நபருக்கு  50 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையுடன், மாத இறுதி வெள்ளிக்கிழமைகளில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும், சாட்சிகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது, அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

எனினும், சந்தேகநபரை பிணையில் எடுக்க முன்வராமையால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (09) அவரது சகோதரி சந்தேகநபரை பிணையில் எடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X