Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலமைச்சர் ஒருவரின் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட சுமை நிறைந்தது என்பதை இப்போதுதான் உணர்கின்றேன். ஒரு முதலமைச்சர் பேச்சாளராகவும் நிர்வாகியாகவும் சகல துறை வல்லுநராகவும் மக்கள் மனமறிந்து நடப்பவராகவும் சமயோசிதம் மிகுந்தவராகவும் சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடியவராகவும் ஊர் உலகத்தில் நடப்பதை உணர்ந்தவராகவும் உடல் வலு கொண்டவராகவும் இன்னும் பல தகைமைகளைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா, புதன்கிழமை (20) பஞ்சலிங்கம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
பல மாணவ, மாணவியர்கள் இளமைப்பருவத்தில் தமதுகற்றல் நடவடிக்கைகளை வெகு சிறப்பாக மேற்கொள்கின்ற போதிலும், மேல் வகுப்புகளுக்கு வருகின்ற போது, கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாது, பிற பொழுது போக்குகளிலும் மாயைகளிலும் மனதைத் தளர விட்டு கற்கின்ற காலத்தை வீணடித்த பின்னர், மனம் வருந்தி செய்வதறியாது தொழிலும் இல்லை பணமும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
கல்வியானது வெளிச்சத்துக்கொப்பானது. இருட்டை வெளிச்சம் போக்குவது போல், அறியாமையை கல்வி நீக்குகின்றது. கல்வியில் சிறந்து விளங்க உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
'தெரியாதவர்களுடனான சிநேகிதம், உங்களை விட வயதில் பல வருடங்கள் கூடியவர்களுடனான சிநேகிதம் என்பன உங்கள் வாழ்வை வீணாக்கி விடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Oct 2025
01 Oct 2025