2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை இல்லை'

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

ஒரு நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தால் அது வட மாகாண சபைக்கான அழைப்பு என்று யாரும் கருதக்கூடாது. முதலமைச்சர் மாத்திரம் வட மாகாண சபை அல்ல. உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் திங்கட்கிழமை (21) தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற நத்தார் கொண்டாட்ட தொடக்க விழாவுக்கு வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். இந்நிகழ்வுக்கு முதலமைச்சர் அழைக்கப்பட்ட போதும், உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை. கிறிஸ்தவ உறுப்பினர்களையோ அல்லது கலை, கலாசார அமைச்சரான த.குருகுலராஜாவையோ இந்நிகழ்வுக்கு அழைத்திருக்க வேண்டும்.

இது திட்டமிட்ட புறக்கணிப்பாகும். இவ்வாறு ஒரு நிகழ்வு நடைபெறுகின்றது என, நிகழ்வு நடைபெற்று முடிந்த பின்னரே எங்களுக்குத் தெரியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X