Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 28 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாண மாவட்டத்தில், இவ்வருடம் கமநலசேவை அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 23 மில்லியன் ரூபாய் செலவில் 16 வாய்க்கால்கள் புனரமைக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி ஆணையாளர் இரத்தினகுமார் நிசாந்தன் தெரிவித்தார்.
குறிப்பாக இவ்வருடம் கிடைக்கபெற்ற நிதியில் இருந்து விவசாயத்தின் தேவைப்பாட்டுக்கமைய 11 சேவை நிலையங்களின் கீழ்வரும் வாய்கால்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
'இவ் வருடத்துக்கான திணைக்கள நிதியில் இருந்து, 16 வாய்கால்களும் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 80 சதவீதமான வேலைகள் தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளன. ஏனைய 20 சதவீதமான வேலைகள் டிசெம்பர் மாத இறுதிக்கு முடிவடையும்' என்று அவர் தெரிவித்தார்.
புலோலி கலநலசேவை நிலையத்தினூடாக முகாவில் வாய்க்கால், கரவெட்டியில் தூவாளி, ஒன்திராய் மற்றும் மித்தில் வாய்கால்கள் புனரமைக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளன.
சாவகச்சேரி சேவை நிலையம் ஊடாக விளைவேலி அம்பலான்துறை, எழுதுமட்டுவாழ் நாகர்கோயில் வாய்கால், இராமாவில் மற்றும் மாசேரி வாய்களுக்கும், அம்பன் சேவை நிலையம் ஊடாக ஓவாளி வாய்கால்; புனரமைக்கப்படுகிறது.
மேலும் வேலணை கமநலசேவை நிலையம் ஊடாக அறவயல் கன்னாவோடை, உடுவில் சேவை நிலையம் ஊடாக சிலம்பாய் உடுவில் வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருவதுடன் கீரிமலை கமநலசேவை நிலையம் ஊடான வாய்க்கால்களும் புனரமைக்கப்பட்டு வரப்படுகிறது.
தொல்புரத்தில் பொன்னாலை கலங்கரை வாய்கள், உரும்பிராய் நிலையம் ஊடாக வாய்க்கால் தரவையும், நல்லூரில் அரியாலை கிழக்கு வாய்க்காலும், சண்டிலிப்பாய் கமநலசேவை நிலையத்தின் ஊடாக சில்லாலை தும்பளபாய் வாய்க்கால்களுமாக 16 வாய்கால்கள் புனரமைக்கப்பட்டு வரப்படுவதாக உதவி ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
4 hours ago