2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மீள்குடியேறிய பகுதிகளுக்கு பஸ் சேவை நடத்த சாரதிகள் இல்லை

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையை நடத்துவதற்கு போதியளவு சாரதிகள் இல்லை என இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (30) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்னமும் பஸ் சேவையானது நடத்தப்படவில்லையென மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சாரதி பற்றாக்குறையால் பஸ் சேவை நடத்தப்படவில்லையென சபை அதிகாரி கூறினார்.

இதன்போது, குறுக்கிட்ட இணைத்தலைவர்களின் ஒருவரான விஜயகலா மகேஸ்வரன், நாடாளவிய ரீதியில் அதிகளவான சாரதிகள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கூறுகின்றார். நீங்கள் சாரதி பற்றாக்குறையாக உள்ளனர் என்கிறீர்கள்? என்றார்.

மட்டக்களப்பு உள்ளிட்ட சில சாலைகளில் அதிகளவான சாரதிகள் உள்ளனர். அதனை ஒட்டுமொத்தமாகப் பார்த்து, அதிகளவு சாரதிகள் உள்ளனர் என்கின்றார்கள். ஆனால் யாழ்.மாவட்டத்தில் சாரதிகள் பற்றாக்குறையாகவுள்ளது என அந்த அதிகாரி கூறினார்.

இந்த விடயத்தை எழுத்து மூலமாக முறைப்பாடாக தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X