Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சொர்ணகுமார் சொரூபன்
எந்த இடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்தார்களோ, அந்த மக்கள் தங்களின் இடங்களுக்குச் சென்று வாழ்வாதாரத்தை தொடங்க வேண்டும். மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே விமான நிலையம் விஸ்தரிப்புப் பற்றி கலந்துரையாடலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரக் கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம், விமான நிலைய விஸ்தரிப்பு, மயிலட்டி இறங்குதுறை விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடி அறிக்கை தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இதற்கமைய இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் முக்கியம். விமான நிலைய விஸ்தரிப்பு தற்போது தேவையில்லை. விஸ்தரிப்பால், மக்களின் பல நிலங்கள் பறிபோகும் அபாயங்கள் இருக்கின்றன. மீள்குடியேற்றத்தின் பின்னரே விமான நிலைய விஸ்தரிப்புப் பற்றி கதைக்கலாம்.
மக்களின் வாழ்வாதாரம் மயிலிட்டி இறங்குதுறையில் தங்கியுள்ளது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் அங்கு மீள்குடியேற்றப்பட்டு, அவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதேநேரத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்யப்படவேண்டும்' என்றார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago