2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'யாழில் ஹோலி பண்டிகையா? எமக்கு ஒன்றும் தெரியாது'

Princiya Dixci   / 2016 நவம்பர் 08 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சொர்ணகுமார் சொரூபன்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படுவதற்கு எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் தெரிவித்தார்.

இந்த ஹோலிப் பண்டிகையானது இந்துக்களுக்குரியதாக காணப்படுகின்ற போதும், அது வட இந்தியாவில் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இப்பண்டிகையானது நமது பிரதேசங்களில் இதுவரை காலத்தில் முன்னெடுக்கப்பட்டதில்லை.

இன்னல்களைச் சுமந்து வாழும் தமிழ்மக்கள் மத்தியில் இவ்வாறான ஒரு பண்டிகை கொண்டாட்டம் முன்னெடுக்கபடவுள்ளமை பலதரப்பட்டவர்கள் மத்தியில் சர்ச்சையினை கிழப்பியது.

இது தொடர்பில் நடராஜனிடம் வினாவியபோது,

ஹோலி பண்டிகை நிகழ்வு ஒரு அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக அறிந்திருக்கிறேன். இந்த நிகழ்வுக்கும் எமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவ்வாறு இடம்பெறும் நிகழ்வுக்கு நாம் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இது தொடர்பில் எழுந்துள்ள கருத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இந்தியத் துணைத்தூதரகம் இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை. ஏற்பாடு செய்த அமைப்பின் ஊடாக மக்கள் சரியான தகவல்களைப் பெற்றுகொள்ளுங்கள் என்றார்.

எதிர்வரும் 27ஆம் திகதி, இந்த பண்டிகையை ஏற்பாடு செய்த, ரத்தி ஈவென்ற் மனேஜ்மன்ற் (Rathee Event Managemen) என்ற நிறுவனம் மக்கள் எதிர்ப்பு மற்றும் மாநகர சபையின் அனுமதி கிடைக்காமை ஆகிய காரணங்களால் இந்த பண்டிகையை யாழில் நடத்துவதை நிறுத்தியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X