2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'வந்தவர்கள் போதையில் இருந்தனர்'

Menaka Mookandi   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வந்தவர்கள் போதையில் இருந்தனர். ஈ.பி.டி.பினர் தான் செய்தனர் என நன்கு தெரியும். வந்தவர்கள் முகத்தை மூடி கட்டியிருந்தனர் என நாரந்தனை இரட்டை படுகொலை வழக்கின் 5 ஆவது சாட்சியான சின்னத்துரை சுரேந்திரகுமார் வியாழக்கிழமை (01) சாட்சியளித்தார்.

நாரந்தனை இரட்டை படுகொலை வழக்கு தொடர்பில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் 9 ஆவது நாளான வியாழக்கிழமை கண் கட்ட சாட்சிகளில் ஒருவரான 5ஆவது சாட்சியான சின்னத்துரை சுரேந்திரகுமார் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நாகலிங்கம் சாட்சியினை நெறிப்படுத்தியிருந்தார்.
அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில்,

வந்தவர்கள் போதையில் இருந்தனர். ஈ.பி.டி.பினர் தான் செய்தனர் என நன்கு தெரியும். வந்தவர்கள் முகத்தை மூடி கட்டியிருந்தனர்.

குறித்த சம்பவத்தில் சிவாஜிலிங்கம், கமல்ஸ்ரோன் ஆகியோருக்கு வெட்டு விழுந்ததை கண்டேன். அப்போது எனக்கு பிடரியில் அடி விழுந்தது. நான் மயங்கி விட்டேன். பின்னர் கண் விழித்து பார்த்தபோது யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் இருந்தேன். அங்கு மாவை சேனாதிராஜாவும் இருந்தார் என, சாட்சியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X