2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

14 வர்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபாய் அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 24 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 14 வர்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதன்கிழமை (23) மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் தீர்ப்பளித்ததாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் வியாழக்கிழமை (24) தெரிவித்தார்.

இவ் 14 நான்கு வர்த்தக நிலையங்களில் இரண்டு சுப்பர்மார்கெட் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகர்கள் தங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து நீதவான் எச்சரிக்கை செய்து அபராதம் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .