2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'வாகனங்களுக்கு தீர்வையற்ற வரி அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை'

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.றொசாந்த்

“வடமாகாண சபை ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகியும் வாகனங்களுக்கு தீர்வையற்ற வரி அனுமதிப்பத்திரம் தமக்கு கிடைக்கவில்லை” என்று வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வரி அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுவிட்டது. எமக்கு மூன்று வருடங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை. எங்களுக்கு வாகனம் இருந்தால் தான் சேவை செய்வோம் என்று இல்லை, நாம் பஸ்ஸில் சென்றும் நடந்து சென்றும் சேவை செய்வோம். ஆனால் வைத்தியர்கள் தமக்கு தீர்வையற்ற வரி அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும் என போராடிய போது, அதனை கொடுத்தார்கள். ஆனால் எமக்கு தரவில்லை” என்று அவர் கூறினார்.

“ஒருவேளை எமக்கு தந்தால், ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும். அதனால் ஏனைய மாகாண சபையில் உள்ள மஹிந்த ஆதரவாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் எமக்கு தராமல் இருக்கிறார்களோ தெரியாது. அதற்காக நாம் அரசாங்கத்திடம் தீர்வையற்ற வரி அனுமதி பத்திரம் தாருங்கள் என மண்டியிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X