2025 ஜூலை 17, வியாழக்கிழமை

65,000 வீடுகளுக்கான மாதிரி வீடுகள் நிர்மாணம்

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வீட்டுத்திட்ட வேலைத்திட்டத்தின் கீழ், மாதிரி வீடுகள் இரண்டை நிர்மாணிக்கும் பணிகள், மல்லாகம் மற்றும் கோப்பாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி வீட்டுத்திட்டத்தில் ஒரு வீடு அமைக்க 2.1 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், 'இவ்வாறான தொகையில் யாழ்ப்பாணத்தில் வீடு நிர்மாணிக்கும் முறையில் 3 வீடுகள் அமைக்க முடியும்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 'கழற்றி பூட்டக்கூடிய இம்மாதிரி வீடுகள், யாழ்ப்பாணத்துக்கு பொருத்தமில்லை' என அதிகாரிகளும் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, மாதிரியாக இரண்டு வீடுகளை அமைப்பது என்றும் அதனை அதிகாரிகள் பொதுமக்கள் பார்வையிட்டு சம்மதித்தால் மாத்திரமே, மேற்கொண்டு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்தே, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் மல்லாகம் பகுதியிலும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கோப்பாயிலும் தலா ஒவ்வொரு மாதிரி வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த மாதிரி வீட்டில் தளபாடங்கள், சமையல் பாத்திரங்கள், சூரியகல மின்சார வசதி, தொலைக்காட்சிப்பெட்டி உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமைக்கப்படும் வீடுகள் பூர்த்தியடைந்தப் பின்னர், அது மக்களுக்கு பிடித்திருந்தால் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X