2025 மே 17, சனிக்கிழமை

அநாகரிகமான முறையில் கைகலப்பில் ஈடுபட்ட இருவருக்கு 5000 ரூபா அபராதம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமான முறையில் கைகலப்பில் ஈடுபட்ட இருவருக்கு யாழ் நீதவான் நீதமன்றம் இன்று 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்தத் தவறின் 2 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இவ்விருவருக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதச் சிறைத் தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாசகர் ஒருவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியும் நேற்று புதன்கிழமை யாழ். பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் அநாகரிகமான முறையில் கைலப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இவர்களை கைது செய்த யாழ். பொலிஸார் இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .