2025 மே 19, திங்கட்கிழமை

பகிடிவதையில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 8பேர் இடைநிறுத்தம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர் ஒருவர் மீது பகிடிவதையில் ஈடுபட்ட எட்டு சிரேஷ்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிடிவதையில் ஈடுபட்ட எட்டு மாணவர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்து கல்வியைத் தொடர்வதில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதலாம் வருட உடற்கல்வி டிப்ளோமா மாணவர் ஒருவரை பகிடிவதை என்ற ரீதியில் எட்டு சிரேஷ்ட மாணவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் பொற்றோர் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த எட்டு மாணவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணைகளுக்கு அமைவாக பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிறுத்தியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X