2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முதியோர் கொடுப்பனவுக்காக இதுவரை ரூ.2,285 மில்லியன்: இமெல்டா

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

நாடு முழுவதிலுமுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட வருமானம் குறைந்த முதியவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை வழங்கும் நடவடிக்கைக்கு சமூக சேவைகள் அமைச்சால் இதுவரையில் 2285.69 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் பிரகாரம் முதியவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், 2012ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் நாடெங்கிலுமுள்ள 2 இலட்சத்து 84 ஆயிரத்து 282 முதியவர்களுக்கு மேற்படி உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உதவி தொகை பெறுவதற்காக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், தங்கள் பிரதேச செயலகங்களிலுள்ள முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர் அல்லது சமூக சேவைகள் அலுவலரை தொடர்புகொண்டு தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

தொடர்ந்து, இந்த உதவி தொகைகளை முதியவர்கள் தங்கள் பிரதேசத்திலுள்ள தபாலகம் மற்றும் உபதபாலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .