Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா புதிய சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம் என்பன பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க மற்றும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளன.
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றமும் பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா புதிய சிவில் மேன்முறையீட்டு மேல் நீதின்றமும் திறந்துவைக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கு 15 மில்லியன் ரூபாய்களும், வவுனியா புதிய சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நிர்மாணிப்பதற்கு 26 மில்லியன் ரூபாய்களும் செலவிடப்பட்டுள்ளன.
முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சில மாதங்களில் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும், தற்காலிக கட்டடமொன்றிலேயே இயங்கி வந்தன.
இதேவேளை, வவுனியா மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம் செயல்பட தொடங்கியதும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இலகுவாக சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதுவரை காலமாக இவ்வாறான மேன் முறையீட்டு மேல் நீதிமன்றமொன்று இல்லாததன் காரணமாக அந்த மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என அவர் கூறினார்.
பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், வேலணை மற்றும் மாங்குளம் ஆகிய நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கும் நீதிமன்ற கட்டடங்களை புனரமைப்பதற்கும் 890 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
1 hours ago