2025 ஜூன் 28, சனிக்கிழமை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 3 சிகிச்சையகங்கள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 17 சிகிச்சையகங்கள் இயங்கி வருகின்ற நிலையில் தற்போது     புதிதாக     3     சிகிச்சையகங்கள் செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளவயதினருக்கான சுகவாழ்வு சிகிச்சையகம், நரம்புத் தளர்ச்சி சிகிச்சையகம், மூட்டுவாதக் சிகிச்சையகம் ஆகியனவே
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சாவகச்சேரி வைத்தியசாலையில்,  பிரதி திங்கட்கிழமைகளில்  கர்ப்பவதிகள், காது - மூக்கு - தொண்டை, மாற்றுத் திறனாளிகள் சிகிச்சையகங்களும், பிரதி செவ்வாய்க்கிழமைகளில் பொது மருத்துவ சிகிச்சையகமும், பிரதி புதன்கிழமைகளில் கண், உள நோய், புற்றுநோய், நரம்புத் தளர்ச்சி, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையகங்களும் பரிசோதிக்கப்படும்.

தொடர்ந்து வியாழக்கிழமைகளில் நீரழிவு, மூட்டுவாதக் சிகிச்சையகங்களும், வெள்ளிக்கிழமைகளில் குழந்தைகள், தோல், வயது வந்தோருக்கான சுகவாழ்வு, காச நோய், பெண் நோயியல் சிகிச்சையகங்களும், சனிக்கிழமைகளில் முதியோர், குழந்தைகளுக்கான சுகவாழ்வு  இளவயதினருக்கான சுகவாழ்வு ஆகிய சிகிச்சையகங்களும் நடைபெறுமென வைத்திய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .