2025 மே 19, திங்கட்கிழமை

திருட்டு குற்றச்சாட்டில் 11 வருடங்கள் தலைமறைவான மூவருக்கு 2 வருட கடூழிய சிறை

Menaka Mookandi   / 2012 ஜூன் 21 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். கோண்டாவில் பகுதியில் 2001ஆம் ஆண்டு வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரை பகிரங்கப் பிடியாணையில் கைது செய்து 2 வருடகடூழியச் சிறைத்தண்டனையை வழங்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேராசா இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்

குறித்த குற்றவாளிகள் 11 வருடங்களாக தலைமறைவானஇடத்தில் வாழ்வதாகவும் கோப்பாய் பொலிஸார் மன்றிற்கு தெரியப்படத்தியமையை அடுத்து அவர்கள் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த குற்றவாளிகள் பிணையில் விடப்பட்ட நிலையில் திரும்ப இந்த வழக்கிற்கு வராமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் மூவரையும் பகிரங்கப் பிடியாணை மூலம் கைது செய்து 2 வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X