2025 மே 19, திங்கட்கிழமை

சேவைக்காலத்தை பூர்த்தி செய்த 103 ஆசிரியர்களுக்கு விரைவாக இடமாற்றம்

Kogilavani   / 2012 ஜூன் 13 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                    (எஸ்.கே.பிரசாத்)
சேவைக்காலத்தை பூர்த்தி செய்த 103 ஆசிரியர்களுக்கு விரைவாக இடம்மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இடம்மாற்றம் பெறும் ஆசிரியர்களின் இடங்களுக்கு கல்வியல் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் இடம் மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் நீண்டகாலமாக நிலவி வருகின்றது. அது தொடர்பாக ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானத்தின் அடிப்படையிலே இந்த இடமாற்றம் நடைபெறவுள்ளது என்றார்.

அத்துடன் வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனம் வன்னியில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக உரிய காலத்தில் வழங்குவதில் தாமதமாகியுள்ளது. இந்த நியமனம் வழங்குவது தொடர்பாக அமைச்சவை அங்கிகாரம் வழங்கியுள்ள நிலையில் வரைவில் நியமனம் வழங்கப்டவுள்ளது என்றார்.

அத்துடன் வடமாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஓய்வினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வலயக் கல்விப பணிப்பாளர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறானவர்களை நிதானமாக கையாளுமாறு கல்விப் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெறப்படும் தரவுகள் மருத்துவ சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு ஆசிரியர்களின் சேவைக்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்குவதா? அல்லது அவர்களுக்கு உளவள சிகிச்சை வழங்குவதா என்று வட மாகாணத்தில் கல்வி அமைச்சு தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X