2025 ஜூன் 21, சனிக்கிழமை

ராமநாதனுக்கு 14 நாள் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண  சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை எதிர்வரும் 13 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவக்கச்சேரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கடந்த 28 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவரை, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தியபோதே நீதவான் லெனின் குமார் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் சாவகச்சேரியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றுமொரு வேட்பாளரான குமார் சர்வானந்தனிடம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்...

அங்கஜன் ராமநாதனின் தந்தை கைது

அங்கஜனின் தந்தை கைது?

அங்கஜனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .