2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரவுவேளையில் சந்தேகத்திற்கிடமாக யாழில் நடமாடிய 16பேர் கைது

Menaka Mookandi   / 2012 மே 12 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி,கிரிசன்)


யாழ்.குடாநாட்டில் இரவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 16பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.சிறிகுகநேசன் தெரிவித்தார்.

யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற வாரந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழில் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் இந்த வாரத்தில் யாழ்.குடாநாட்டில் இரவில் சந்தேகிக்கும் விதமாக நடமாடியவர்கள் தாங்கள் இரவில் ஏன் வீதியில் நிற்கின்றோம் என்பதை சரியான காரணங்கள் தெரிவிக்காமையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் கொடிகாமப்பகுதியில் 4 பேரும், கோப்பாயில் 6 பேரும், சுன்னாகத்தில் 3 பேரும் மற்றும் தெல்லிப்பளையில் 3 பேருமாக மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

யாழில் சென்ற வாரத்தில் ஸ்ரான்லி வீதியில் இரண்டு இராணுவத்தினர் தனிப்பட்ட காரணத்திற்காக சுடப்பட்டு இறந்துள்ளனர். 15 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பகுதியில் இளம் பெண்ணை அடித்து துன்புறுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசோலை ஏமாற்று மோசடியில் ஈடுபவட்ட விகவாகரம் தொடர்பாக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நெடுந்தீவில் குற்றங்கள் எதுவும் நடந்ததாக பதிவுகள் இல்லை. சாவச்சேரியில் பெண் ஒருவரது சைக்கிள் திருடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாயில் பாடசாலை ஒன்று இரவில் உடைக்கப்பட்டு இசைக்கருவில் பல திருடப்பட்டுள்ளன. சந்தேக நபர்களைத் தேடிவருகின்றோம்.

ஊர்காவற்துறையில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இளவாலைப்பகுதியில் இந்தியா கேரளாக் கஞ்சா  4 கிலோக்கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது' என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் கிகேரா, காங்கேசன் துறை பொலிஸ் பரிசோதகர் காமினி பெரகார, யாழ்.பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் குலதுங்க, கோப்பாய் பொலிஸ் நிலைய பரிசோதகர் ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X