2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ். மாவட்டத்திற்கு மேலும் 2,000 வீடுகள்

Super User   / 2011 நவம்பர் 10 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய வீட்டுத் திட்டத்தில் மேலதிகமாக 2,000 வீடுகள் யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ். மாவட்டத்திற்கு மொத்தமாக 9,000 வீடுகள் கிடைக்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்திய வீட்டுத் திட்டத்தின் முதற் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் யாழ். மாவட்டத்தில் 150 வீடுகள் அமைக்கப்பட்டும் என அவர் கூறினார்.

இந்திய வீட்டுத் திட்டத்தின் பிரகாரம் முதலில் யாழ்.மாவட்டத்திற்கு ஏழு ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதன் போதமை குறித்து வட மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மேலும் 2,000  வீடுகள் யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் மொத்தம் 60,000 வீடுகள் தேவையாக உள்ளன. எனினும் 25,000 வீடுகள் மட்டுமே தற்போது கிடைக்க பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர் யாழ். மக்களின் தேவைகளை உணர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் யாழ். மாவட்டத்தில் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு முன் வரவேண்டும் எனவும்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X