Menaka Mookandi / 2010 நவம்பர் 28 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு 2010ஆம் ஆண்டுக்கான குஷி சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. இவரோடு பல்வேறு நாடுகளைச் செர்ந்த 18 பேர் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பான பிரமாண்டமான விருது விழா, பிலிப்பைன்ஸ் தலைநகரமான மனிலாவில் அமைந்துள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.
குஷி சமாதான விரது சமூகத்துக்கு எடுத்துக்காட்டான உத்தமர்களுக்கு அல்லது சமாதானம் மற்றும் மனித உயிர்களுக்கான மதிப்பு, கௌரவம் என்பவற்றை நிலைநாட்ட பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ்ப்பாண மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்காகவும் சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வுக்கு வழங்கிய பங்களிப்புக்காகவும் இந்த மதிப்பு மிக்க விருதியை குஷி பவுன்டேஷன் அவருக்கு வழங்கியது.
குஷி பவுன்டேஷன் இந்தப் விருதினை 2002 இலிருந்து வழங்கி வருகிறது. கௌரவ பெரி எஸ்.குஷி இந்தப் பரிசை வழங்கி வருகிறார். அவரது காலஞ்சென்ற தந்தையான கெப்டன் ஜெமெனியானோ ஜாவியா குஷி ஞாபகமாக இதை அவர் வழங்கி வருகிறார்.
ஆசியாவின் சமாதானத்துக்கான நோபல் விருது எனக் கூறக்கூடிய குஷி சமாதானப் பரிசை ஏற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, தான் இவ்வாறான சேவையை யாழ்ப்பாணம் மக்களுக்கு வழங்க வழிகாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன் அவர் அந்தப் விருதியை பெற்றதற்கான பெருமையை தனக்கு உதவிய இராணுவ உத்தியோகத்தர்களுடன் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.



12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago