2025 மே 19, திங்கட்கிழமை

2,039 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


யாழ். மாவட்டத்திலுள்ள வேலையற்ற 2,039 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திங்கட்கிழமை வழங்கிவைத்தார்.

கடந்த ஜுன் மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியோரில், 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றவர்களுக்கே இதன்போது நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின், யாழ். மாநாகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஈ.பி.டி.பி. யாழ். மாவட்ட அமைப்பாளர் கமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ். அமைப்பளர் தங்கராஜா , யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X