Super User / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.தர்மர்)
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று புதன்கிழமை இரவு இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மாதகல் கடற்பகுதியில் 7 இந்திய படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 26 இந்திய மீனவர்கள் அப்படகுகள் சகிதம் மாதகல் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மாதகல் பகுதியிலிருந்து 10 படகுகளில் சென்ற சென்ற மீனவர்களாலேயே மேற்படி இந்திய மீனவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டதாக வலி தென்மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்ரமணியம் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.
இம்மீனவர்களை இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி கடற்பரப்பில் 108 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித் துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
12 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
21 minute ago
21 minute ago