Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை சுங்கத் திணைக்களம் யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தனது பணிகளைத் தொடங்கவுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் உதவி கண்காணிப்பாளர் சாகர மகாநாம தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் அஞ்சல் திணைக்களத்தின் உதவியுடன், தபாலகங்களில் பொதிகளைச் சோதனையிடும் பணிகளில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் இதற்காக பொதிகளைச் சோதனையிடும் பகுதிகள் தபாலகங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்கு உயர்நிலை அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்து, திரும்பியுள்ளது.
எதிர்காலத்தில் சுங்கத் திணைக்களம் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் பணியகங்களை திறந்து, தனது நடவடிக்கைகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் உதவி கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.
முன்னர் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை போன்ற ஐந்து இடங்களில் சுங்கத் திணைக்களத்தின் பணியகங்கள் இயங்கி வந்தன.போர்ச் சூழலால் இந்தப் பணியகங்கள் மூடப்பட்டு விட்டன.
சுங்கத் திணைக்களத்தின் பணியகக் கட்டடங்கள் போரினால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago