2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெசாக்தின பாதுகாப்பிற்கான ரோந்து நடவடிக்கையின்போது 34 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 16 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வெசாக்தினத்திற்கான பாதுகாப்பையொட்டி யாழ்ப்பாணத்தில்  இரவு வேளைகளில் பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகணேசன் தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையிலான ஒருவார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ரோந்து நடவடிக்கையின்போது, நீதிமன்றத்தினால் பிடியாணை பிறக்கப்பட்ட 12 பேரும் சந்தேகத்தின் பேரில் 22 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ள இந்நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொடிகாம் பொலிஸாரினால் 6 பேரும் சாவகச்சேரிப் பொலிஸாரினால் 2 பேரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் 8 பேரும் தெல்லிப்பளை பொலிஸாரினால் 5 பேரும் பருத்தித்துறை பொலிஸாரினால் 7 பேரும் நெல்லியடிப் பொலிஸாரினால் 4 பேரும் அச்சுவேலிப் பொலிஸாரினால் 2 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  குறிப்பிட்டார்.  

இதேவேளை, யாழ். மாவட்டத்தில்; பாதுகாப்பை பேணும் முகமாக இரவு வேளைகளில் ரோந்து நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X